பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழ் இலக்கிய வரலாறு


வில்லை. இராமாயண வெண்பாவும் இது போன்றே இன்று காணவில்லை கம்பராமாயணமும் வில்லிபுத்தூரார் பாரத முந்தோன்றிச் செல்வாக்குப் பெற்ற பின்னர், இவை அழிந்து பட்டிருக்கலாம்! உரைநடை நூல்கள் - - - சமணப் புலவர்கள், தமிழும் வடமொழியும் சரிபாதி யாகக் கலந்து மணிப்பிரவாள நடையில் நூல் எழுதினர். ஸ்ரீ புராணமும், கத்திய சிந்தாமணியும் இத்தகைய நூல் களே . இக் கால உரைநடையின் போக்கினை இந்நூலில் நாம் காணலாம். சமணர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகள் சமணர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளார்கள். சமண சமயத்தினர் பலரும், தம் சமயத்திற்குத் தொண்டு ஆற்றியதோடு நில்லாமல், இலக்கிய இலக்கணத் தொண்டினையும் செய்துள்ளனர். இவர்தம் இலக்கணத் தொண்டு பெரிதும் பாராட்டப்பட வேண்டுவதாகும். இல்லற நெறியில் ஈடுபட்ட சமணர், து றவற நெறியில் ஈடுபட்ட சமணர் ஆகிய இருதிறத்தாருமே தமிழ் மொழிக் குச் சிறக்கத் தொண்டாற்றினர். முன்னவர் 'சிராவகர்' என்றும், பின்னவர் 'சமணர்' என்றும் வழங்கப்பட்டனர். சிலப்பதிகாரத்தில் 'சாவக நோன்பினர் அடிகள்' என்று கோவலன் குறிக்கப்படுகிறான். 'பல்புகழ் நிறுத்த படிமை யோனே' என்ற தொடரைக் கொண்டு தொல்காப்பியனாரைச் சமணர் என்பர் காலஞ்சென்ற பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், 'தமிழ்ச்சுடர் மணிகள்'