பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-, - - 5. சோழர் காலம் (கி.பி. 850-1350) ஒன்பதாம் நூ ற் றாண் டின் இடைப்பகுதியில் தஞ்சையை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விசயாலய சோழன் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றிச் சோழர் ஆட்சியை நிறுவினான் . முதலாம் இராசராசசோழன் காலத்தில் சோழப்பேரரசின் எல்லை விரிவடைந்தது. முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் காவிரிக் கரையில் அமைந்திருந்த சோழப்பேரரசு கங்கைக் கரையையும் எட்டியது. இந்த வடநாட்டு வெற்றியே அவனுக்குக் 'கங்கை கொண்ட சோழன்' என்ற பெயரினைத் தந்தது . குலோத்துங்க சோழன் காலத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்த இப் பேரரசு, மூன்றாம் இராசராசன் காலத்தில் சீரழியத் தொடங்கியது. பின்னர்ப் பாண்டியர் தலையெடுக்கத் தொடங்கினர். "சோழப் பேரரசர் ஆண்ட காலம் தமிழ்ப் பண்பாட்டின் பொற்காலமாகும். இவர்கள் காலத்தில் இலக்கியங்கள் நன்முறையில் ஆதரிக்கப்பட்டு யாண்டும் பரவின"1. நாயன் மார்களும் ஆழ்வார்களும் சமய உணர்வு கொண்டு பாடிய, கல்நெஞ்சத்தையும் கனி .விக்கும் இசைப்பனுவல்கள் சோழர் காலத்திலேயே தொகுக்கப்பட்டன. சைவத் திருமுறைகளை 1. The age of Imperial Cholas (850-1200) was the golden age of Tamil culture and it was naturally marked by the widespread practice and patronage of literature. - K.A. Nilakanta Sastri's A. History of Soutபு India P. 357