பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தமிழ் இலக்கிய வரலாறு


- நாடகம் முதலிய நாடகங்கள் பெருங் கோயில்களிலே நடிக்கப் பட்டன. நடனம், நாடகம், இசை ஆகிய கலைகள் எல்லாம் பெருவாழ்வு எய்தின. ஆழ்ந்த தத்துவக் கருத்துகள் கொண்ட நூல்கள் எல்லாம் சமயக் கருத்துகளின் சாரமாய் எழுந்தன. இவ்வாறு மனித சமுதாயத்திற்கு அமைதியை அளிக்கும் சமயம், சோழப் பேரரசர் காலத்தில் வளர்ந் தோங்கியிருந்தது. சோழர்கள் ஆண்ட நானூறு ஆண்டு களில் தமிழகம் அரசியல் பொருளாதாரக் கலைவளங்கள் கொழித்துச் சிறந்தது. ஐம்பெருங் காப்பியங்கள் "காப்பியமென்பது காவியமெனும் வடசொல்லின் திரிபு. ஐம்பெருங் காப்பியமென்னும் வழக்குப் பிற்காலத்ததென்பது விளங்கும். அதன் வைப்பு முறைக்குப் போதிய காரணம் இல்லையென்பதும் தேற்றம். அன்றியும் இவ்வைந்தும் பெருங் காப்பியங்கள் தாமா என்பதைப்பற்றி ஆராய்ந்தால் இவற்றுட் சில அல்ல என்னும் முடிவுதான் பெறப்படும்" என்று தமிழ்க் காப்பியங்கள் என்னும் நூலில் திரு. கி. வா. ஜகந்நாதன் குறிப்பிடுகின்றார். வட மொழியில் ஐம்பெருங் காப்பியங்கள் என்று குறிப்பிடப்படுவன ஹர்ஷகவி இயற்றிய நைஷதமும், காளிதாசன் இயற்றிய இரகுவமிசமும், குமார சம்பவமும், பாரவி இயற்றிய கிராதர்ஜுனியமும், மாக்கவி இயற்றிய சிசுபால வதமும் ஆகும். அம்முறையில் அவ்வழக்கையொட்டியதோ என்னும் முறையில் ஐம்பெருங் காப்பியங்களாய் அமைந்திருப்பன, சி ல ப் ப தி கா ர ம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி என்பனவாகும். பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்து நூல்கள் என்பதை முன்னர்க் கண்டோம்.