பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழ் இலக்கிய வரலாறு


வாழ்க்கையின் தன்மையினை ஒரு பாடல் உணர்த்து கின்றது : 'பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேவரு மூப்பு மாகி நாளுநாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாத தென்னே!' சீவக சிந்தாமணி இது ஐம்பெருங் காப்பியங்களுள் தலையாயதாய் வைத் தெண்ணப்படுவது: "நிலவுந் தமிழ் இலக்கியச் சின்னங்களுள் மிகச் சிறந்தது. தமிழ்மொழியின் இலியதும் ஒடிசியுமென இலங்கும் இப்பெரு நவீன காவியம் உலகப் பெருங்காப்பியங் களுள் ஒன்று.1 இது "தத்தை குணமாலையொடு தாவில் புகழ்ப்பதுமை ஒத்த புகழ்க் கேமசரி" முதலாய மங்கையர் எண்மரைச் சீவகமன்னன் திருமணம் செய்து கொண்டு வாழ் வினை முற்றத் துய்த்து இறுதியில் வீட்டுப்பேற்றினை நோக்கித் துறவு பூண்டதைக் கூறுகிறது. இதற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. இவ்வாறு இம்மண நூலில் துறவுள்ளத் தினையும் காண்கிறோம். விருத்தப் பாவினைச் சிலப்பதிகாரம் கானல் வரியில் கண்டாலும், அது நல்ல வடிவம் பெற்றது சிந்தாமணியி லேயே எனலாம். விருத்தப்பாவிற்குத் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்பு இந் நூலாற் கிடைத்தது. இயற்றமிழின் இனிய பெற்றியினையும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரியும் ஆற்றலினையும் சிந்தாமணி பெற்றுள்ளது. இந் நூலின் விருத்தப்பா வழக்கினையே பிற்காலத்தில் பெரும் 1. Dr. G. U. Pope speaks of this work as the greatest existing Tamil Literature monument. The great romantic epic which is at once the lliad and Odyssey of the world. -Prof. A. Chakravarthy Nainar, M.A., I.E.S. (Retd)