பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலம்

145

சோழர் காலம் 145 - - - - புலவர்களான கம்பர், சேக்கிழார், கச்சியப்பர் என்பவர்கள் கையாண்டுள்ளார்கள். சிந்தாமணியின் விருத்தப்பாக்கள் எளிய இனிய நடையில் அமைந்து, கற்பனை வளமும், காவிய நயமும், பொருட்செறியும், உவமை அழகும், உருவகச் சிறப்பும் பெற்று மிளிர்கின்றன. மூவாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் கொண்ட இந் நூலில், 'சிருங்காரரசம்' என வடநூலார் குடுப்பிடும் காதற்சுவை பெரிதளவு தலை தூக்கி நிற்கிறது. இந்நூல் பதின்மூன்று கலம்பகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நூலைச் செய்தவர் திருத்தக்க தேவர் என்னும் சமண சமயத் துறவியார். இவரை வீரமா முனிவர் 'தமிழ்க் கவிஞருள் அரசர்' (He is a prince among the Tamil poets) என்று கூறுகிறார். தீபங்குடியில் திரமிள சங்கத்தைச் சார்ந்த பெரியார் பலர் வாழ்ந்து சமயத் தொண்டும் மொழித் தொண்டும் ஆற்றினர்; சிந்தாமணி யாசிரியர் திருத்தக்க தேவர் மேற்கூறிய பிரிவைச் சேர்ந்தவர். ஏமாங்கத நாட்டின் வளத்தை ஆசிரியர் வருணிக்கும் திறம் படித்து மகிழ்தற்குரியது! 'காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே.' சீவகன் பிறந்த இடத்தினையும் நிலையையும் ஆசிரியர் அவலந் தோன்றக் கூறுகிறார்: 'வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே! த.-10 | | | | | | |