பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

147


விளைந்த தொல்லைகள் பல. அவற்றால் சிந்தாமணிக்குக் கேடு நேரவில்லை. எந்தக் காலத்திலும் சிந்தாமணியைக் காத்த பெருமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதைச் சிந்தாமணித் தமிழ்ப்பெற்றி என்று கூறாது, வேறென்ன கூறுவது?"

ஐஞ்சிறு காப்பியங்கள்

உதயண குமார காவியம்

இந்நூல் 'உதயணன் கதை' என்றும் வழங்குகிறது. இது வத்சதேசத்து அரசன் உதயணன் கதையினை விருத்தப்பாவில் கூறுகிறது. ஆறு காண்டங்களும் 367 செய்யுள்களும் இந் நூலில் உள்ளன. காப்பிய அமைதி இந்நூலில் இல்லை.

நாக குமார காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் இந்நூல் ஒன்றென்றும், நூலாசிரியர் சமண சமயத்தைச் சார்ந்த துறவியர் என்பதையும் தவிரப் பிற செய்தி ஏதும் தெரியவில்லை.

யசோதர காவியம்

உதயண குமார காவியத்தைப் பார்க்கிலும் இந்நூல் செய்யுள்கள் நயமுடையன. அணிநலன்கள் மிகுதியாய் இந்நூலில் இல்லை; தூய எளிய நடையில் விருத்தப்பாக்கள் அமைந்துள்ளன. ஐந்து சருக்கங்களும் 330 பாக்களும் கொண்ட இந்நூலில் காணப்படும் 'சோழன் மாரித்தாள்' வரலாறு வேறு எந்தத் தமிழ் நூலிலும் காணப்படவில்லை.

சூளாமணி

இதன் மூலக் கதை ஆருகத மகாபுராணத்தைத் நழுவியது. பாகவத்தில் வரும் பலராமன் கண்ணன்