பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழ் இலக்கிய வரலாறு


மறைந்தது. நிகண்டுகள் மொழி ஆராய்ச்சிக்கும் சிறிது துணை புரிய வல்லவை.

திவாகரம்

காலத்தில் முற்பட்ட நிகண்டான இதில் சங்கச் சான்றோரின் வழக்குகள் மிகுதியாகக் கையாளப்பட்டு உள்ளன. பிற்கால வழக்குகள் அவ்வளவாக இந்நூலில் இல்லை. இதன் முதல் நூல் ஆதி திவாகாரம் என்றும் சிலர் கூறுவர். சிலர் சேந்தன் என்னும் மன்னன் வேண்டுகோளுக்கிணங்கத் திவாகர முனிவரால் இந்நூல் இயற்றப்பட்டதென்பர். சேந்தன் திவாகரம் என்ற பெயரும் இதற்குண்டு.

பிங்கல நிகண்டு

இதனை இயற்றிய ஆசிரியரின் பெயரோடு சார்த்தி இந்நூல் பிங்கல நிவண்டு என வழங்கப்படுகிறது. திவாசர முனிவரின் குமாரர் இதன் ஆசிரியர் என்பர். பல்லவர்கள் இந்நூலில் தாழ்த்திப் பேசப்பட்டிருப்பதை நோக்க, இந்நூல் காலத்தாற் பிற்பட்டது என்பது சிலர் கருத்து. இந்நூலின் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர்.

சூடாமணி நிகண்டு

மாபுராணம் செய்த குணபத்திர முனிவரின் மாணவராகிய மண்டலபுருடர் இந்நூலின் ஆசிரியர். வீரமண்டல புருடர் என்னும் பெயரும் இவருக்குண்டு இந்நூலாசிரியர் கிருட்டிணதேவராயர் காலத்தவர் என்பர். மாறாக, "சூடாமணி பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்" என்பர் திரு. கே. எஸ். சீநிவாசப் பிள்ளை.[1]


  1. திரு. K. S. ஸ்ரீநிவாச பிள்ளை , தமிழ் வரலாறு ப. 251.