பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

159


களும் நிறைந்த நூல் இது. சிவபெருமானின் ஐந்தெழுத்தும் திருநீறும் இந்நூலில் சிறப்பிக்கப்பட்டிருப்பதால், ஈசனிடம் இடையறாத அன்பு பூண்டவர் ஒளவையார் என்பது புலனாகின்றது. இந் நூலில்,

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா'

என்று விநாயகப் பெருமானின் துதி, கடவுள் வாழ்த்துச் செய்யுளாய் அமைந்துள்ளது. இச் செய்யுள் தவிர மேலும் நாற்பது செய்யுள்கள் இந்நூலில் உள. இவை தவிர, இவர் விநாயகரகவல், ஞானக்குறள், அசதிக்கோவை என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். 'ஒளவையின் வாக்கு அமுதமாகும்' என்ற பழமொழிக்கு விளக்கமாய் இவருடைய நூல்கள் எல்லாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அரிய நீதிகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

கலிங்கத்துப் பரணி

பரணி - பெயர்க் காரணம்

தினைப்புனத்தில் காவல் செய்வோர் ஒரு பரண் அமைத்து அதன் மீதமர்ந்து, தினைக்கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் பறவைக்கூட்டங்களைத் துரத்துவது போன்று, போர்க்களத்தில் வீரன் ஒருவன் யானை மீதிருந்து எதிரிகளைத் துரத்துவதால் இச்செய்தி பற்றிக் கிளத்தும் நூல் பரணியாகும் என்பர். தினைப்புனம் காவல் செய்வோர் பரண்மீதிருந்து பறவையினங்களைத் துரத்துதல் போன்று, அரசனின் வில், வேல், வாள் ஆகிய படைக்கலங்களால் அமைக்கப்பட்ட போர்ப்பரண் மீதிருந்து புலவர் இந்நூலைப்