பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழ் இலக்கிய வரலாறு


பரணி பற்றிய ஒரு சிறப்பான செய்தி என்னவெனில், இந்நூலானது வெற்றியடைந்த வேந்தன் பெயரால் வழங்கப்படாமல், தோல்வி பெற்ற மன்னன் பெயரைச் சார்ந்தே வழங்கப்படும் என்பதாம்.

கலிங்கத்துப்பரணி எளிய இனிய நடையும், பொருட் சிறப்பும், கற்பனை நயமும், காவியச் சுவையும், ஓசைச் சிறப்பும் பெற்று மிளிர்கிறது.

கலிங்கத்துப்பரணியின் கடை திறப்புப் பகுதி, வட நூலார் சிருங்காரச்சுவை என வழங்கும் இன்பச் சுவையை இனிது எடுத்துரைப்பதாகும்.

வீரச்சுவையினை,

'குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே

கரையென இருபுடை கிடக்கவே'

என்னும் தாழிசையில் காணலாம்.

காளிதேவியை வழிபடுவோர் செயலை,

'அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யாவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்த சிரங் கொற்றவையைப் பரவு மாலோ

குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ!'

என்னும் தாழிசை உணர்த்தி நிற்கிறது: விழுமிய ஓசைச் சிறப்பினையும் இது கொண்டு இலங்குகிறது.

இக் கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் சயங்கொண்டார் என்னும் புலவர் பெருமான் ஆவர். பிற்காலப்