பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழ் இலக்கிய வரலாறு


'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்'

என்று குறிப்பார். இந்நூலுக்கு இதனை இயற்றிய சேக்கிழார் பெருமான் இட்ட பெயர் 'திருத்தொண்டர் புராணம்' என்பதாகும். 'அளவில்லாத பெருமையராகிய அளவிலா அடியார் புகழ் பாடியதால், 'தொண்டர் சீர் பரவுவார்' என்று இவர் வழங்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவரான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள், தம் நூலில், 'பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று இவரைச் சிறப்பிக்கின்றார். மேலும், 'சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்னும் நூலையும் இயற்றியிருக்கின்றார்.

சேக்கிழார் பெரிய புராணம் இயற்றியது, சீவக சிந்தாமணி அக்காலத்தில் அரசனையும் மக்களையும் தன்வயப்படுத்தியிருந்ததை அகற்றுவதற்கே என்பர். ஆனால், தமிழ்த் தென்றல் திரு.வி.க. இக்கருத்தினை ஏற்கவில்லை. சேக்கிழார் பதினோராந் திருமுறையிலும் பிற நூல்களிலும் காணப்பெறாத செய்திகளைப் பெரிய புராணத்தில் கூறுகிறார். திருநீலகண்டர் இளமையில் துறந்த வரலாறும், சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமையும், சுந்தரர் சங்கிலியாரை மணந்த செய்தியும் இந்நூலிலன்றிப் பிற நூல்களில் காணப்படாத செய்திகளாகும்.

பெரிய புராணம் பெருங் காப்பியமா?

பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் இந்நூலில் அமையவில்லை என்பர். ஆனால், இது பெருங்காப்பியமே என்று அறிஞர் பலர் துணிகின்றனர். சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்தில், 'சைவ முதல் திருத்தொண்டர்