பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந் நூலைப் பற்றி....

திரு. சி. பாலசுப்பிரமணியன், எம்.ஏ., எம்.லிட் எழுதியுள்ள இந்நூலில், தமிழ் இலக்கிய வரலாறு தெளிவாகவும் செம்மையாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ளது.

- டாக்டர் மு. வரதராசனார்

இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் மாணவர் என்பதனை இந் நூலின் நடையும் கருத்தும் விளக்குகின்றன.

-பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்

.... அவரது நூல் பாட திட்டத்திற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது. மாணவர் படித்துப் பயன்பெறத் தகும் முறையில் எழுதப்பட்டுள்ளது. எளிய நடையைப் பெற்றுள்ளது.

- டாக்டர் மா. இராசமாணிக்கனார்

தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்குகள் (trends) அனைத்தையும் மனத்துட்கொண்டு, வகை செய்து, இவ்வாசிரியர் அவற்றைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதிப் போகின்றார்.

- தமிழ்ப் பெரும் புலவர் ச. ஆறுமுக முதலியார்

தமிழ் இலக்கியம் அன்று தொட்டு இன்றுவரை சிறந்தும் நிறைந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் வளர்ந்து வந்த நிலையினை இச்சிறு நூலில் விடாது விளக்கிக்கொண்டு வரும் ஆசிரியர் திறன் பாராட்டுதற்குரியது.

- பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம்