பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

169


வைத்தார் என்பர். பிற்காலத்தில் காப்பியத்தைச் செய்த சும்பருக்குப் பொதுமக்கள் பெருமையினை ஏற்றி, அவர் பெயரோடு சார்த்திக் கம்பராமாயணம் என்று வழங்கத் தலைப்பட்டு, அப் பெயரே இன்றும் நின்று நிலவும் பெருமை பெறுவதாயிற்று. இப் பெரிய காவியத்தில் அமைந்துள்ள பாடல்கள், ஆறு காண்டங்களாயும், 113 படலங்களாயும் 10,500 பாடல்களாயும் பகுக்கப்பட்டுள்ளன.

கம்பரின் பெருமை

'கல்வியிற் பெரியார் கம்பர்', 'கம்பனாரிடைப் பெருமையுள்ளது', 'கம்பன் வீட்டுள் ஒரு சிறுபுன் கட்டுத்தறியும் கவி செய்யும்', 'கவிச்சக்ரவர்த்தி கம்பர்' என்ற தொடர்கள் எல்லாம் கம்பர்தம் பெருமையினை உணர்த்துவனவாகும்.

'இம்பர் நாட்டின் செல்வமெலாம்
எய்தி அரசாண் டிருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா
ஓங்கு நீழல் இருந்தாலும்
செம்பொன் மேரு அனையபுயத்
திறல்சேர் இராமன் திருக்கதையில்
கம்ப நாடன் கவிதை யிற்போற்

கற்றோர்க்கு இதயம் களியாதே!'

என்ற பாட்டொன்று கம்பரின் கவியமுதத்தினை விளக்க வல்லதாகும். மேலும் பாத்திரங்களின் உரையாடல்களிலும், விசேஷமாக அவர்கள் விம்மும் உணர்ச்சியுடன் பேசும் பாவங்களிலும் கதை வளர்ந்துகொண்டு போவதில் ஆங்காங்கே நிகழும் நாடகபாவம் நிறைந்த சம்பவங்களை யும் கட்டங்களையும் சித்திரிப்பதில்தான் கம்பரின் கவிதை ஈடும் எடுப்பும் இல்லாமல் பூரண சக்தியுடனும் விளங்குகிறது.”[1]திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்கள்" தமிழிற்குக் கதியாவார் இருவர், ககரத்தைக் கம்பராக


  1. திரு ஏ. வி. சுப்ரமணிய ஐயர், கல்வியிற் பெரியவர் கம்பர்.