பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழ் இலக்கிய வரலாறு

வும், திகரத்தைத் திருவள்ளுவராகவும் கொள்ளுக" என்று எழுதியுள்ளார். எனவேதான் இந்நூற்றாண்டுக் கவிஞரான மகாகவி பாரதியாக, 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு', 'கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்' என்று கூறியதோடு அமையாது.

'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூழிதனில் யாங் கணுமே பிறந்ததிலை

உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை'

என்றும் பாடினார். 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்ற பாராட்டுச் சொல்லும் எழுந்தது.

இவர் தம் நூலின் பல இடங்களிலும் சிந்தாமணித் தொடரினையும், குறட்கருத்தினையும் கையாளுகிறார் நன்றி மறவாத நன்னெஞ்சம் வாய்ந்த இவர், தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பராமாயணத்தில் உரிய இடத்தில் ஏற்றிப் பெருமைப்படுத்துகிறார். சடகோபரந்தாதி, சரசுவதியந்தாதி, இலக்குமியந்தாதி, ஏரெழுபது முதலிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் மகன் அம்பிகாபதி, 'அம்பிகாபதிக் கோவை' என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர்.

கம்பராமாயணத்தில் காணப்படும்

சிறப்பியல்புகளிற் சில

தமிழ்நாட்டு மரபு

வடநாட்டுக் கதையைத் தமிழ் மரபிற்கு இயைந்த முறையிலே மாற்றி அமைந்துள்ளார் கம்பர். சான்றாக, திருமணத்திற்கு முன் சீதையும் இராமனும் ஒருவரையொருவர் கண்டு தம் உள்ளங்களைப் பரிமாறிக் கொண்டனர் எனக் கூறுவார்,