பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

171


'பருகிய நோக்கு எனும் பாசத் தால்பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.'

கவிதையின் பெற்றி

சிறந்த கவிதை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமுகத்தான் குறிப்பிடுகின்றார்.

'புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச்

சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்.'

இயற்கை வருணனை

கம்பர் இயற்கையின் பேரழகிலே ஈடுபட்டவர்; கற்பனை வளம் மிக்கவர்; மருத நிலத்தைப் பின்வருமாறு சுவைபட வருணிக்கின்றார்:

'தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து

நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.'

கம்பர் கனவு

கவிஞர்கள் கனவு காண்பவர்கள்; இவர்களை 'மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்' (Poets are the unacknowledged legislators of the world) என்றார் கவிஞர்