பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

175

நிலைக்கும் பருவ வளர்ச்சிக்கும் ஏற்பக் காதல் கொண்டு வருந்துவதாகவும் புலவர் பெருமக்களால் கவிதைப் பெற்றியும் கற்பனைச் சிறப்பும் சுவை நலமும் அமையப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை, உலா என்று வழங்கப்படும்.

தமிழ்ப் பேரகராதி,

"Poem in Kali Venpa metro which describes how women of the seven magalir paruvam are love-stricken at the sight of a hero as they see him coming along in Procession" என்று விளக்கந் தந்துள்ளது.

உலா அமைப்பு

உலாவின் அமைப்பினைப் பாட்டியல் நூலார், முன்னெழு நிலை; பின்னெழு நிலை என இரு பிரிவாகப் பகுப்பர். தலைவனது சிறப்பு, பெருமை, தலைவன் நீராடல், அணிகலன் புனைதல், உடன் வருவோர் கூற்று, ஊர்தியில் அமர்தல் முதலியவற்றைக் குறிப்பிடும் பகுதி முன்னெழு நிலை என்றும், ஏழு பருவ மகளிர் வருணனை, அவர்தம் விளையாடல்கள், தலைவனைக் கண்டவழி ஏற்படும் காதல் மெய்ப்பாடுகள். காதல் நோய்த் துன்பங்கள் முதலியன பின்னெழு நிலை என்றும் கூறப்படும்.

பாட்டுடைத் தலைவனொடு தொடர்புடைய ஊரின் பெயரால் சில உலாக்களும், பாட்டுடைத் தலைவன் இயற்பெயரோடு சார்த்திச் சில உலாக்களும், பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயர் இயற்பெயர் ஆக இரண்டொடும் சார்த்திச் சில உலாக்களும் பெயர் பெற்றிருக்கக் காணலாம்.

இவ்வுலா இலக்கியங்கள், புறப்பொருள் துறையில் பாடாண் திணையைச் சார்ந்தனவாகும்.

ஒட்டக் கூத்தர் உலா முதலியன பாடுவதில் வல்லவர் என்பதை. 'கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்'