பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

179

6. நாயக்கர் காலம்

(கி. பி. 1350-1750)

பதின்மூன்றாம் நூற்றாண்டிலே புகழ் பூத்து விளங்கிய சோழப்பேரரசு தாழ்நிலை எய்தியது. அதன் பின்னர்ப் பாண்டியர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் முசுலீம்கள் தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தார்கள். மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியனின் திறமைக் குறைவை நன்கு பயன்படுத்திக் கொண்ட மாலிக் காபூர், ஏராளமான செல்வத்தை இங்கிருந்து திரட்டிச் சென்றான். சமய உணர்வுக்கும் முசுலீம்கள் ஊறு செய்த காரணத்தால், இந்துக்கள் அவர்கள்பால் மிகுந்த வெறுப்புக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் அரிகரர், புக்கர் என்ற இரண்டு சகோதரர்களால் ஓர் இந்துப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அதுவே விஜய நகரப் பேரரசு. இந்துக்களை எல்லாத் துறைகளிலும் முசுலீம்கள் பிடியிலிருந்து காப்பாற்றுவதே அதன் நோக்கமாய் அமைந்தது. அப் பேரரசு இந்து சமயத்திற்கும் கலைகளுக்கும் ஒரு புது வாழ்வினை அளித்தது. அதே நேரத்தில் கி.பி. 1538ல் மூன்றாம் பள்ளாள மன்னன் மைந்தன் குமார கம்பணன், முசுலீம்களை வென்று, மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலினான். இதன் பின்னர் நானூறு ஆண்டுகள் வரை வழிவழியாக நாயக்கர் பேரரசு மதுரையில் நிலைத்திருந்தது. இவர்கள் ஆண்ட காலப்பகுதி தமிழக வரலாற்றில் ஒரு சிறந்த பகுதியாகும்.

முசுலீம்கள், ஐரோப்பியர்கள் பிடிகளிலிருந்து தென்னாட்டை ஓரளவு காப்பாற்றிய பெருமை, நாயக்க மன்னர்களையே சாரும். "பழங்காலப் பேரரசர்கள் என நாம்