பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தமிழ் இலக்கிய வரலாறு


போன்று கருத்துச் சிறப்பும், உண்மை அல்லது வழிபாட்டு முறைமையும் அமைந்த கொள்கை பிறிதொன்று இல்லை' என்றும், 'இக் கொள்கை மிகப் பழமையானது' என்றும், 'சமயத் துறையில் தென்னிந்தியாவின் பிற சமயங்களுக்கு இச் சைவ முறையே வழி காட்டியாயிருக்கிறது, என்றும், 'தமிழர்களுடைய சமயம் இதுவே' என்றும், 'மற்றவை இதற்குப் புறம்பானவும் அண்மைக் காலத்தனவுமே ஆகும்', என்றும், தென்னிந்தியாவில் சமய உணர்வும்' உண்மையையும் வாழ்வையும் வெளிப்படுத்தும் ஆற்றலும் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கை சிறந்து விளங்குகிறது என்றும் கூறியுள்ளார்.1 இவ்வாறு சைவ சித்தாந்தக் கொள்கையானது தமிழ்நாட்டின் பழைய சிறப்பான கொள்கை என்பது கொள்ளக் கிடக்கின்றது.

சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு.2 அவை 'திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிர


1. There is no school of thought and no system of faith or Worship that comes to us with anything like the claims to Saiva Siddhanta. The System possesses the merits of great antiquity. In the religious world the Saiva System is the heir to all that is most ancient in South India. It is the religion of the Tamil people, by the side of which every other form is of comparatively foreign and recent orgin. As a system of religious thought, as an expression of faith, and life the Saiva Siddhanta is by for the best that South India possesses, (Rev. Mr. Goudie)

- M. S. Purnalingam Pillai,
Tamil Literature p. 242, 243

2.'உந்தி களிறு உயர் போதஞ் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்- வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.