பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. பழமையும் சிறப்பும்

தமிழ் இலக்கியம் தொன்மையானது; பண்பட்டது; வரலாற்றுச் சிறப்புடையது; என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது; பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே, தனக்கே உரிய கலப்பற்ற தூய இலக்கியப் போக்கினைக் கொண்டு இலங்கியது. எனவே, தமிழில் காணக் கிடக்கும் பழம்பாடல்களில் அக்கால இயற்கை அழகின் இனிமையும், மக்கள் வாழ்க்கை நெறியின் செம்மையும் புலப்படுகின்றன. தமிழ் இலக்கியம் பற்றிக் குறிப்பிடவந்த பெஸ்கி பாதிரியார், ‘தமிழ்ப்புலவர் ஆற்றல்சான்ற மொழியினைக் கையாண்டனர்; தமிழ்க் கவிதையில் சிறந்த பாட்டுகள் இறையுணர்வு பற்றியும் இயற்கையருள் பற்றியும் காணப்படுகின்றன’ என்று கூறியுள்ளார்[1].

தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆய்வதற்கு முன், நாட்டினுடைய வரலாற்றையும், மக்களுடைய வரலாற்றையும் ஓரளவு காணவேண்டும். ஓவியம் பின்னணியைத் துறந்து எவ்வாறு வாழ இயலாதோ அவ்வாறு இலக்கிய வரலாறும் நாட்டு மக்களின்றி இயங்காது. மக்கள் வாழ்க்கையினின்று


  1. 1. As regards Literature, that ‘Unique genius’ Father Beschi, writes that “The Tamil Poets use genuine language of Poetry and there are excellent works in Tamil Poetry on the subject of devine attributes and the nature of virtue.”
    -S. D. Sargunar B. A. ‘Lecture on Christianity and Tamil’ - p. 36.
த.-2