பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தமிழ் இலக்கிய வரலாறு


இவர் இயற்றிய நூல் இராமானுச நூற்றந்தாதி ஆகும். சகத்திர நாம பாடியம் முதலிய நூல்கள் செய்தவர் பராசரப் பட்டரின் மாணவர் நஞ்சீயர் ஆவர். சீரங்க நாதர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் திரு நாராயணபுரம். இவரது காலம், பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பர். நஞ்சீயரின் மாணவர் நம்பூரிற் பிறந்த நம்பிள்ளை ஆவர். வரதராசர் என்ற பெயரே இவருக்குப் பெற்றோர் இட்ட பெயராகும். ஒன்பதாயிரப்படி, பெரிய திருமொழி உரை, திருவாய்மொழி உரை, திருப்பள்ளியெழுச்சி, திருவிருத்த உரை முதலிய பல நூல்களின் ஆசிரியர் இவர். அடுத்து, பன்னீராயிரப்படியை இயற்றிய அழகிய மணவாள ஜீயர் பன்னீராயிரம் கிரந்தங்களையுடைய பாகவதமும் செய்துள்ளார், தீபப்பிரகாசிகை, கீதாசாரம் முதலிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன. தென்கலையார் பெரிதும் போற்றும் பெரியவாச்சான் பிள்ளை இருபத்து நாலாயிரப் படி' என்னும் விரிவுரையை இயற்றியவர் ஆவர். திருவாய் மொழி தவிர்த்து, நாலாயிரப் பிரபந்தத்தில் எஞ்சியுள்ள மூவாயிரம் பாடல்களுக்கும் இவர் விளக்கவுரை வரைந்துள்ளார். திருவாய் மொழிக்கு முப்பதாயிரப் படியினை எழுதியவர் வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஆவர். வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்ல வேதாந்த தேசிகர், 'நவரத்தினமாலை, திருச்சின்னமாலை, அடைக்கலப்பத்து' என்னும் நூல்களை இயற்றியுள்ளார். காஞ்சி வரதராசப்பெருமானின் பெருமையினைக் கூறும் வகையில், இவருடைய 'அத்திகிரி மான்மியம்' என்னும் நூல் அமைந்துள்ளது. 'அட்டாதச ரகசியம்' என்னும் பதினெட்டுத் தத்துவ நூல்களை இயற்றியவர் பிள்ளை லோகாசாரியார். அழகிய மணவாளப் பெருமாணயினார், திருப்பாவை உரை ஆறாயிரப்படி, மாணிக்கமாலை, ஆசாரிய இருதயம், அருளிச் செயல் இரகசியம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். தென்கலையார் தலைவராகக் கொண்டாடும் சிறப்புவாய்ந்த பெரிய ஜீயர் மணவாள முனிகள் என்னும் இயற்பெயர் கொண்டவர்; சிக்கிற்கடாரம் என்னும் ஊரினர். உபதேச -