பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

191

இலக்கண இலக்கிய

உரையாசிரியர்கள்

தமிழின் பழைய இலக்கண நூலாம் தொல்காப்பியத்திற்குப் பலர், உரை எழுதினர். 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரியார் சிலர் சங்க நூல்களுக்கும் தெளிந்த உரை எழுதத் தொடங்கினர். சங்கம் மருவிய நூல்களான திருக்குறள் சிலப்பதிகாரத்திற்கும் இவர்கள் உரை கண்டார்கள். இவர்களுடைய உரையின் உதவி இன்றேல் நாம் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலாது. எனவே, நாம் இவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டவர்களாவோம்.

இளம்பூரணர்

காலத்தால் முற்பட்ட உரையாசிரியர் இளம்பூரண அடிகள். 'ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்திற்கு முதல் முதல் உரை கண்ட சிறப்பினால் இவர், 'உரையாசிரியர்' என்றே வழங்கப்படுகிறார். 'புலவு துறந்த பெரியோர்' என்று பிற்காலத்தில் இவரைப் பாராட்டுகின்றனர். தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர் உரை உள்ளது. இவர் உரை சுருக்கமும், எளிமையும், தெளிவும் கொண்டது. இவரது காலம் 14ஆம் நூற்றாண்டின் இறுதியாகவாவது 15ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவாவது இருக்கலாம் என்பர் அறிஞர் திரு. கா. சு. பிள்ளை.[1]

பேராசிரியர்

உரையாசிரியர்களுள் 'பேராசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அமைந்திருப்பது இவருடைய உரையின் பெருமையினைப் புலப்படுத்தும். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது ஆனால், பொருளதிகாரத்தில், மெய்ப்பாட்டியல், உவம


  1. திரு. கா. சுப்பிரமணியபிள்ளை. இலக்கிய வரலாறு, ப. 385.