பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

197


என்னும் புலவர் ஆவர். இவர் வடமொழிப் பெருங்கவிஞர் காளிதாசனின் இரகுவம்சத்தைத் தமிழில் தந்துள்ளார். இருபத்தாறு படலங்களும் இரண்டாயிரத்து நானூற்று நான்கு செய்யுள்களும் கொண்ட இந் நூலின் நடை சிறிது கடினமாகக் காணப்பட்டாலும், பொருள் பொதிந்து அமைந்துள்ளது.

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

'ஏடாயி ரங்கோடி எழுதாது தன்மனத்து எழுதிப்படித்த

விரகன்


இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிவீர ராகவன்'

என்ற தொடரால் அறியலாகும். அந்தகக்கவி வீரராகவ முதலியார் தொண்டை மண்டலத்தில் செங்கற்பட்டுக்கு அணித்தேயுள்ள பூதூரில் பிறந்தவர். இவர் இலங்கைப் பரராச சேகரனைப் பாடிப் பல பரிசில்கள் பெற்றுத் திரும்பினார். அதுபொழுது அவர் பாடிய பாடல் இருபொருள் தரும் சிலேடைச் சொற்கள் அமைந்து விளங்குகிறது. இவர் இலங்கை மன்னனிடம் பாடிய 'வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து' என்னும் பாடல் இலக்கிய நயமுடைத்து. இவர் சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருவாரூர் திருக்குன்றமாலை, திருக்கழுக்குன்றப் புராணம், சந்திரவாணன் கோவை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

அதிவீரராம பாண்டியர்

'நைடதம் புலவர்க் கெளடதம்' என்னும் சிறப்புவாய்ந்த நைடதம் என்னும் நூலை இயற்றிய புலவர் - அரசர் - அதிவீரராம பாண்டியர் ஆவர். அவர் தென்காசியிலிருந்து பாண்டி நாட்டை ஆண்டார்; தென்காசியில் ஒரு கோயிலும் கட்டியுள்ளார். இவர் இயற்றிய நைடதம் நளதமயந்தியர் வரலாற்றினைக் கூறுவது. இதற்கு முன்தோன்றிய பெருங்காப்பியங்களின் பொலிவினை இந்நூலில் காணலாம். இதன் முதன் நூல் வடமொழியில் அமைந்துள்ள நைடதமாகும்.