பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் இலக்கிய வரலாறு

முகிழ்ப்பதே இலக்கியம். எனவேதான், மொழி வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம்’ என்று ஹட்சனும்[1] ‘கவிதை வாழ்க்கையின் ஆய்வு’ என்று மாத்யூ அர்னால்டும்[2] கூறிப்போந்தனர். நாடு, மக்கள், மொழி முதலியவற்றினைக் காண்போம்.

‘மொழியே மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’[3] என்பர். மொழி வளம் பெறுவதும், வறுமையுறுவதும் அம்மொழி பேசும் மக்களின் மனவளத்தை ஒட்டியன.[4] ‘உலகில் எண்ணிறந்த மொழிகள் தோன்றின; வளர்ந்தன. காலப்போக்கில் பல அழிந்தொழிந்தன. சிலவே இன்றளவும் நிலைத்து வாழும் பேற்றினைப் பெற்றிருக்கின்றன. அம் மொழிகளுள்ளும் தமிழ் சீனம் போன்ற ஒருசில மொழிகளே பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் பயின்று வருகின்றன. வடமொழி, கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய வரலாற்றுப் பழமைவாய்ந்த மொழிகள் பேச்சு வழக்கு இழந்து மொழியளவில் நின்று விட்டன. எனவேதான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,


  1. Literatue is thus fundamentally an expression of life through the medium of language.
    -W.H. Hudson, An Introduction to the study of Literature, p. 10.
  2. Poetry is the bottom, the Criticism of life. - Mathew Arnold.
  3. The language is the mirror of their (People) minds -Pillsburi and Meader, The Psychology of Language, p. 290.
  4. Language is enriched and impoverished along with the enrichment or impoverishment of their minds.
    -Whitney. Language and study of Language p. 139.