பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

203


‘பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோா் நினைவிலே நடந்தோ ரேன

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.’

வில்லிபுத்துாராா் காலம் கி.பி. பதினான்காம் நுாற்றாண்டு என்பா்.

அருணகிாிநாதா்

இவா் இயற்றிய திருப்புகழ் குன்றமெறிந்த குமரக் கடவுளின் புகழினை இன்னிசைப் பாடல்களில் உணா்த்துகின்றது. தமிழ் நாட்டில் பல்வேறு கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் செவ்வேளைச் சந்தப்பாக்களால், சந்த விருத்தப் பெருங்கடலாம் அருணாகிாியாா் பாடியிருப்பது கொண்டு, அப் பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் இன்று சைவா்களால் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றன. நுாலின் பெயா் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி, நுாலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ் என்றே வழங்கப்படுகின்றமை இந்நுாலின் சிறப்பாகும்.

அருணகிாிநாதருடைய பிறப்பிடம் நடுநாட்டில் இப்பொழுது வடாா்க்காடு மாவட்டத்தில் இருக்கும் திருவண்ணாமலையாகும். இவரோடு வில்லிபுத்துாரரையும் இணைத்துக் கூறுகின்ற கதை பொருந்தவில்லை. ஏனெனில், வில்லிபுத்துாரார் அருணகிாிநாதருக்குச் சுமாா் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாதல் முற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியால் அறியக் கிடக்கின்றது. [1]

திருப்புகழில் 'சலாம்', சபாஷ்', 'ராவுத்தன்' என்ற முகம்மதிச் சொற்கள் கலந்திருப்பது நோக்கத்திற்குாியது. இது


  1. தி.வை. சதாசிவப் பண்டாரத்தாா், தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15ஆம் நுாற்றாண்டுகள்) ப. 95