பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

211

 தருமபுர மடம்

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி நிறைவுற்ற சிறகு தமிழ் வளர்க்கும் பொறுப்பில் சைவ - ஆதீனங்கள் பெரும் பங்கு வகித்தன. சித்தாந்த சைவத்தை வார்க்கும் நோக்கில் கிளைத்த இவ்வாதீனங்கள் தமிழுக்கு ஆற்றியிருக்கும் - ஆற்றிவரும் பணிகள் குறிக்கத்தக்கன தமிழகத்துச் சைவஆதீனங்கள் பதினெட்டு என்பர். அவற்றுள் பெரும்பாலானவை கி. பி. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னே தோன்றின. தமிழகச் சைவ - ஆதினங்களில், திருக்கயிலாயத் திருமரபில் மெய்கண்ட சந்தானத்தில் விளங்கிவருவது தருமபுர ஆதீனம். தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையைச் சார்ந்து. காவிரியின் தென்கரையில் இவ்வாதீனம் அமைந்துள்ளது.

தென்பாண்டி நாட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில், கார் காத்த சைவ - வேளாளர் மரபில் தோன்றிய ஸ்ரீகுருஞானசம்பந்தர் என்ற அருளாளரால், கி. பி. 16ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் தருமையாதீனம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம் போன்ற துறைகளில் இவ்வாதீனம் இயற்றிவந்திருக்கும் பணிகள் அளப்பரியன. ஸ்ரீ குருஞானசம்பந்தர் எட்டு நூல்களை அருளிச் செய்தார். சிவபோகசாரம், சொக்கநாதவெண்பா, முத்தி நிச்சயம் என்பன சிறந்த அருள் நூல்கள். இவ்வாதீன நான்காவது குருமூர்த்திகள் ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஸ்ரீ குமரகுருபரரின் 'ஞானாசிரியராகத் திகழ்ந்து பல அருள் நூல்களை அனார் வாயிலாக வெளிப்படுத்தியருளினார். பத்தாவது குருமூர்த்திகள் பதினாறு தோத்திர நூல்களை இயற்றினார். ஆதீன அருளாளர்களும், ஆதீன ஆதரவில் வளர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும் அரிய நூல்கள் பலவற்றை இயற்றித் தமிழுக்கு வழங்கினர். ஸ்ரீ வெள்ளியம் பலவாணர் முத்திநிச்சயப் பேருரை, ஞானவராண விளக்கப் பேருரை, ஸ்ரீ சம்பந்த சரணாலயர் வடித்த கந்தபுராணச் சுருக்கம், படிக்காசுச் புலவர் இயற்றிய புள்ளிருக்குவேளூர்க்