பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

213


சென்னையில் சமயப் பிரசார நிலையம் நிறுவித் தமிழும் சைவமும் தழைத்தினிதோங்க நற்பணிகள் பலவற்றையும் இவ்வாதீனம் ஆற்றி வருகிறது.

ஆதீனம் சமய - சாத்திரத் தமிழ் மாநாடுகளை அவ்வப்போது நிகழ்த்திவருகிறது. ஆதீனத் திருக்கோயில்களில் திருமுறைப் பெருவிழாக்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்படுகின்றன; ஆதீனப் பல்கலைக் கல்லூரியுடன் சைவ - சித்தாந்தக் கல்லூரி ஒன்றும் நடைபெற்றுவருகிறது. தமிழ் இசைவாணர்களும், கலைஞர்களும் ஆதரிக்கப்படுகின்றனர். ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணிமன்றம் என்ற அமைப்பும் அண்மையில் தொடங்கப்பெற்ற சைவ - சித்தாந்த மேல்நிலை ஆராய்ச்சி மையமும், சமூக - சமயப் பணிகளாற்றி வருகின்றன.

தமிழ்ப் பரிசுகள் பலவற்றை நிறுவி ஊக்கமூட்டிவரும் தருமையாதீனத்தைத் தற்போது புரந்துவரும் 26வது குரு மூர்த்திகளாகிய ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறந்த தமிழறிஞராகத் திகழ்பவர்கள். இவர்கள் ஆட்சிக்காலத்தில் ஆதீனம் தமிழ் வளர்ச்சியில் அரும்பணிகள் பலவற்றை ஆற்றிவருவது குறிக்கத்தக்கது.

திருப்பனந்தாள் மடம்

இம்மடம், கி.பி 17 20 - இல், ஸ்ரீ காசிவாசி தில்லைநாயக சுவாமிகளால் நிறுவப்பட்டது. இவரும், இவருக்கு முன்னிருந்த ஐந்து பெரியவர்களும், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் காசிமாநகரில் நிறுவிய குமாரசாமி மடத்தில் இருந்தவர்கள். அம் மடம் இப்போது 'காசி மடம்' என அன்போடு வழங்கப்படுகின்றது. அம்மடத்தின் தொடர்பாக ஆடுதுறை இரயிலடியிலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ள திருப்பனந்தாளில் ஒரு மடம் நிறுவப்பட்டதால், இம் மடத்திற்குத் 'திருப்பனந்