பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழ் இலக்கிய வரலாறு


ஏழாவது பருவம் அம்புலிப் பருவம். இது பதினைந்தாம் மாதத்து நிகழ்ச்சி கூறுவது. இது சந்திரனைக் 'குழந்தையுடன் ஆடவா' எனக் கூறும் பருவமாகும். 'முத்தம், வருகை அம்புலிப் பருவங்கள்' மிகச் சிறந்த பருவங்களாகும். இவ்வெழு பருவங்களும் இரண்டு பிள்ளைத்தமிழுக்கும் பொதுவாகும், சிற்றில் சிதைத்தல் எனப்படும் ஆண்பாற் பிள்ளைத் தமிழின் எட்டாவது பக்குவம் பதினேழாம் மாதத்து நிகழ்வது. ஒன்பதாவது பருவம் சிறுபறை முழக்கலாகும். இறுதிப்பருவம் சிறுதேர் உருட்டலாகும். இவை முறையே பத்தொன்பதாம் இருபத்தோராம் மாதத்து நிகழ்ச்சியை விளக்குவனவாகும். பெண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதி மூன்று பருவங்கள், நீராடல், அம்மானை, ஊசல் ஆகும். நீராடல் என்பது, பெண் குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டும் பருவமாகும். அம்மானை என்பது, பெண் குழந்தையைக் கழங்கினை மேலே வீசி ஆடும்படி வேண்டும் பருவமாகும். ஊசல் என்பது, பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆடும்படி வேண்டுதலை அறிவிக்கும் பருவமாகும்.

நயம்

பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் எழுதியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும், பகழிக்கூத்தர் எழுதியுள்ள திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள சேக்கிழார் பிள்ளைத் தமிழும் சிறப்புடையனவாகும்.

'தொடுக்குங் கடவுள்' எனத் தொடங்கும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் பாடல் தெய்வத் தன்மையும் இலக்கிய நயமும் பொருந்தியதாகும். அப்பாடல் வருமாறு:

'தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்

சுவையே! அகந்தைக் கிழங்கையகழ்ந்