பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

223


தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே' வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனங் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே! மதுகரம் வாய்

மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே;
மலையத் துவசன் பெற்றபெரு

வாழ்வே வருக வருகவே!'

பகழிக்கூத்தர் இயற்றிய திருச்செந்தூர்ப்பிள்ளைத் தமிழ்?, 'பிள்ளைத் தமிழாயினும் பெரியதமிழ்' என்று பாராட்டப்படும் பெருமை வாய்ந்தது; சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய சுவைகள் நிறைந்தது. சான்றுக்கு ஒரு பாடல் வருமாறு:

'கத்தும் தரங்கம் எடுத்தெறிய
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு;

தத்தும் சுரட விகடதடத்
தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்