பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

தமிழ் இலக்கிய வரலாறு


என்னும் பாடலில் தம் சைவ சமயப்பற்றைப் புலப்படுத்துகின்றார்.

பிள்ளைப்பெருமாளையங்கார்

வைணவச் சார்பான 'அஷ்டப்பிரந்தம்' இவர் இயற்றிய நூலாகும். தமிழ் இலக்கியப் புலமைக்கும் பயிற்சிக்கும் இந்நூல் ஓர் அளவுகோலெனக் கருதப்பட்டு வந்தது என்பதை 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்ற வாக்குக் கொண்டு அறியலாம். சொல்நோக்கு, பொருள் நோக்கு. தொடை நோக்கு, நடைநோக்கு, துறை நோக்கு ஆகிய எந் நோக்கும் பெற்று இலக்கியமாய் இப் பிரபந்தத் தொகுதி இலங்குகிறது. நூலாசிரியர் ('திவ்வியகவி' எனவும் 'மணவாளதாசர்' எனவும் வழங்கப்படுகிறார். 'திருநறையூர் நம்பி 'மேகவிடு தூது' என்னும் மற்றொரு பிரபந்தமும் இவர் இயற்றியதே.

படிக்காசுப் புலவர்

தொண்டை மண்டலத்தில், கடந்தை நகரில், செங்குந்த மரபில் பிறந்த இவர், இரகுநாத சேதுபதி என்னும் இராமநாதபுரம் அரசரின் அவைப் புலவராய் வீற்றிருந்தார். அக் காலத்துக் காயற்பட்டினத்தில் வாழ்ந்த பெருவள்ளலான சீதக்காதி என வழங்கும் முகம்மதிய வள்ளலின் கொடைச்சிறப்பினைப் புகழ்ந்து. பல தனிப் பாடல்கள் பாடியுள்ளார். அவையெல்லாம் நயமுடையவை. தொண்டை மண்டல சதகமும் இவர் இயற்றியதே. உயர்ந்த சந்தப் பாடல்களைப் பாடவல்லவரான இவர்தம் பாடலைப் பற்றிய பாராட்டுரைகளைப் பலபட்டடைச் சொக்க நாதப் புலவர் நெஞ்சார வழங்கியுள்ளார்.

'மட்டாருந் தென்களந்தைப் படிக்காசன்
உரைத்த தமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்

பரிமளிக்கும்: பரிந்து அவ் வேட்டைத்