பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

229


தாய் விளங்கியது. ஆனால் தென்தேசத்தில் பாண்டியர்கள் தங்கள் செல்வாக்கை இழந்தபோது, கி.பி. 1300 ஆண்டில் மாலிக்காபூர் என்னும் இசுலாமியத் தளகர்த்தன் தென்னிந்தியா மீது படையெடுத்து வந்தான்; மதுரையை வென்று, தோற்ற மன்னனிடம் திறைபெற்றுச் சென்றான். இவ்வரசியல் செல்வாக்கால் இசுலாமியருள் பலர் தமிழ்ப் புலமை நிரம்பிக் கவி பாடும் ஆற்றலையும் பெற்றனர். மேலும் இக்காலத்தில் சில அரபுச் சொற்களும், உருதுச் சொற்களும் மக்கள் பேச்சு வழக்கில் கலந்தன. சபாஷ், சலாம் போன்ற சொற்கள் இலக்கியத்திலும் புகுந்தன. பழைய கருத்துகளும் உவமைகளும் திரும்பத் திரும்ப இக் காலத்து நூல்களில் இடம்பெற்றன. எனவே அவை மக்கள் மனத்தில் நிலைக்காமல் மறையலாயின. புராணம், கலம்பகம், தனிப்பாடல்கள் பெருகின. ஆயினும் இசுலாமியப் புலவர்கள் நபி நாயகத்தின் வரலாற்றினையும், இதனை ஒட்டிய செய்திகளையும் தமிழில் எழுதத் தலைப்பட்டதே இக் காலத்தின் புதுமை எனலாம்.

சர்க்கரைப் புலவர்

நகைச்சுவை தோன்ற உரையாடுவதிலும், செய்யுள் இயற்றுவதிலும் வல்லவரான இவர், மதீனாவைச் சிறப்பித்து ஓர் அந்தாதி பாடியுள்ளார். மதீனா, அரேபியாவில் இசுலாமியர்களின் புண்ணியத் தலமாய் விளங்குகிறது. இப் புலவர் காலம் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

சவ்வாதுப் புலவர்

இவர் சர்க்கரைப் புலவரின் மைத்துனர் என்பர். இவர் எவனீச்சுரம் என்னும் ஊரினர். இவர் முகமது நபியின் மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அஃது ஆண்டவர் பிள்ளைத்தமிழ் என்று வழங்கப்படுகிறது. சில தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.