பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழ் இலக்கிய வரலாறு

வண்ணக்களஞ்சியப் புலவர்

இவரது இயற்பெயர் முகம்மது இபுராகிம் என்பதாகும். வண்ணப்பாடல்கள் - சந்தப் பாடல்கள்- பாடுவதில் இவர் வல்லவர். ஆதலால் 'வண்ணக் களஞ்சியப் புலவர்' எனப் பெயர் வழங்குவதாயிற்று. இவர் மதுரைக்கு அண்மையி லுள்ள மீசல் என்னும் இடத்தில் பிறந்தார். மதுரையில் ஒரு தம்பிரானைச் சார்ந்து, பல மொழிகளையும் கற்றுணர்ந்தார் என்பர். முகம்மது நபியின் அருமை பெருமைகளை விளக்கிக் கூறும் 'முகையதீன் புராணம்' இவரால் இயற்றப்பட்டு நாகூரில் அரங்கேற்றப்பட்டது. இவர் பழுத்த தம் எண்பத் தொன்பதாவது வயதில் இயற்கை எய்தினார்.

அலியார் புலவர்

இவர் இந்திராயன் படைப்போர்', 'இபுனி ஆண்டான் படைப்போர்' என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

முகமது உசைன் புலவர்

இருநூற்று ஐம்பத்தெட்டுக் குறள்களைக் கொண்ட 'பெண் புத்தி மாலை' என்னும் நூலின் ஆசிரியர் இவர்.

மதாறு சாகிபு புலவர்

'மிதிறு சாநா' என்னும் காப்பிய நூல் இவர் இயற்றியதாகும்.

நயினா முகம்மது புலவர்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர் 'முன்கிரின் மாலை' என்னும் நூலை இயற்றியுள்ளார்.

உமறுப் புலவர்

கீழைக்கரையில் சோனகர் வகுப்பில் பிறந்த இவர், இசுலாம் மதத்தைத் தழுவினார். தமிழில் இவர் பெற்ற