பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

235


பினைக் காண்கிறோம். உரைநடையும் செய்யுளும் கலந்த நூல்கள் அக்காலத்தில் எழுந்திருந்தன என்பதே அக்குறிப்பாகும். இதனை,

'தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே'[1]

என்று தொல்காப்பியனார் செய்யுளியலில் குறிப்பிடுகின்றார். இதனை ‘உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று அக்காலத்தில் வழங்கினர். பெருந்தேவனார் பாரதமும், தடூகர் யாத்திரையும் இவற்றிற்குச் சான்றுகளாகப் பழைய உரை நூல்களில் காட்டப்படுகின்றன. மேலும், தொல்காப்பியனார்,

‘அங்கதம் முதுசொலொ டவ்வேழ் நிலத்தும்’[2]

என்று பொருளியலிலும் ஒரு நூற்பாவினை அமைக்கிறார். இந் நூற்பா, நூல் புணர்க்கும் முறை ஏழு பிரிவென்றும் அவற்றில் ஒன்று 'உரையாப்பு' வகை என்றும் விதந்தோதுகிறது. அவ்வுரைநடையினை நான்கு வகையாக அவரே பிரித்துரைக்கிறார்.

'பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று

உரைவகை நடையே நான்கென மொழிப.

'[3] இதனால், உரைநடையும் செய்யுளும் கலந்துள்ள நூல்களும், பாட்டிற்கு உரையாகக் கூறப்படும் உரை நூல்களும், ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லும் நவீனங்களும், நகுதற்கு ஏதுவாகிய நாடகங்களும், சிறு


  1. தொல்காப்பியம் - செய்யுளியல்: 237
  2. தொல்காப்பியம் - பொருளியல்: 391
  3. தொல்காப்பியம் - செய்யுளியல்: 173