பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் இலக்கிய வரலாறு

கள்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டுக் கோட்டையில் இடம் பெற்று விளங்கின.”[1]

தென்பாண்டிக் கடல் முத்து உலகப் புகழ் வாய்ந்தது, முத்தம் (முத்து) முதலிய தமிழ்ச் சொற்கள் வடமொழியின் பழைய வேதமான இருக்கு வேதத்திலே இடம் பெற்றுள்ளன. உரோம் நாட்டுப் பெண்டிர் தமிழ் நாட்டு முத்தைப் பெரிதும் விரும்பினர். உலோலா என்னும் உரோம் நாட்டு அரசி 30,000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணிந்திருந்தாள். உரோம் நாட்டு மக்களின் இத்தகைய ஆடம்பர வேட்கையால், அந்நாட்டுப் பொருளாதார நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டதாகப் பெரிப்ளூஸ் (Periplus) நூல் குறிப்பிடுகின்றது.[2] ‘ஆண்டொன்றுக்கு உரோம் நாடு, தான் இந்தியாவிலிருந்து பெறும் ஆடம்பரப் பொருள்களுக்குக்காக மிலியன் பவுனுக்கு ஈடான பொன்னை வாரி வழங்கி வறுமையுற்று விடுகிறதே’ என உரோம் நாட்டு வரலாற்றாசிரியர் (Pliny) வருந்திக் கூறினார்.[3]

கி. மு. 20 இல் பாண்டிய வேந்தனொருவன், அகஸ்டஸ் என்னும் கிரோக்கப் பெருவேந்தனது அவைக்குத் தூது


  1. பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் - தமிழா நினைத்துப்பார். ப. 21.
  2. The extravagant Importation of luxuries from the east without adequate production of commodities to offer in exchange was the main cause of the successive depreciation and degradation of the Roman curreney loading finally to its total repudiation.
    -P. T. Srinivasa Iyengar - History of the Tamils, p. 308
  3. So that Pliny complained In 70 A. D. that India drained gold to the value of nearly a million pounds a year giving bake her own wares, which are sold among us at fully a hundred times their first cost. - ibid p. 305