பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

239


உண்டு.[1] 'பெஸ்கி' என வழங்கும் வீரமாமுனிவர் பதினெட்டாம் நூற்றாண்டில் உரைநடையினைப் பெரிதும் வளர்த்தார், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் உடைநடை நூல்களை, அச்சியற்றி வெளியிட்டுச் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கப் பாடுபட்டார். இவ்வாறு தமிழ் உரைநடை வித்து. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் முளைத்து, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் செடியாகி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரமாகி, இருபதாம் நூற்றாண்டில் கனி தந்து பலன் தருகின்றது.

மேனாட்டுக் கிறித்தவர்கள்

தத்துவ போதக சுவாமி (Robert de Nobile)

உயர்குல இந்துக்களைக் கிறித்தவராக்கும் நோக்கத்தோடு இத்தாலியிலிருந்து வந்த அவர், அதற்கேற்றவாறு நடை உடை பாவனைகளைப் பிராமணர்போல் மாற்றிக்கொண்டார். மதுரையிலே வாழ்ந்த இவர் மயிலாப்பூரில் 1656இல் காலமானார். இவர் ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல் முதலிய பல உரைநடை நூல்களை எழுதினார். ஆனால் அவை மறைந்தொழிந்தன.


  1. With this booklet of 6 pages entitled Doctrina Christem or Tampiran Vanakkam (தம்பிரான் வணக்கம்) Tamil became the first Indian and Ceylonese language in which books were printed. -Xavier S. Thaninayagam-Article on "The first book printed in Tamil"-Tamil Culture p. 289 dated July 1958.