பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

241


கலிவெண்பா என்னும் பிற செய்யுள் நூல்களையும், 'தொன்னூல் விளக்கம்' என்ற ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூலையும் இவர் செய்துள்ளார்.[1]

சீகன் பால்க் ஐயர்

இவர் 1706இல் தரங்கம்பாடிக்கு வந்து, முதன்முதல் இங்கே பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைப் பரப்பினார். முதன் முதலில் தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் இலத்தீன் இலக்கணத்தையும், தமிழ் இலத்தீன் அகராதியின் சில பகுதிகளையும் இவர் ஹாலி நகரத்தில் அச்சிட்டிருக்கிறார்.

எல்லிஸ் துரை

இவர், திரு. முத்துச்சாமிப் பிள்ளையவர்களைக் கொண்டு பழைய ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்தார். அவரைக் கொண்டு வீரமாமுனிவர் வரலாறு வெளிவரச் செய்தார். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியுள்ளார்.

இரேனியுஸ் ஐயர்

போப்பையரால் பாராட்டப்பட்ட இவர், பாளையங்கோட்டையில் சமயத் தொண்டாற்றினார். மக்களுக்கு முடிந்த அளவில் உதவி புரிந்த இவர், 'வேத உதாரணத் திரட்டு' என்னும் உரைநடை நூலை ஆக்கியுள்ளார்.

போப்பையர் (Rev. G. U. Pope)

ஆங்கில நாட்டவரான இவர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூடங்களையும், சமயப்பள்ளி (Missions)


  1. டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை, கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்.ப. 6.

த.-16