பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தமிழ் இலக்கிய வரலாறு


களையும் நிறுவினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராய்ப் பணி புரிந்தார். இவர் மேலை நாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச்செல்வத்தைக் காட்டினார்: நீதியின் நீர்மையை உணர்த்தினார்; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப் பணியாகக் கொண்டார் எனலாம். [1] இவர் திருக்குறள் முழுவதனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந் நூலின் பெருமையினை உலகறியச் செய்தார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தையெல்லாம் வருவிளையாட்டாற் போலும் மறுமொழியதனில் வைத்தீர்' என்று. பேராசிரியர் சூலியன் வின்சனின் பாராட்டினைப் பெற்றார். நாலடியார் முழுவதனையும், புற நானூறு, புறப் பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் பெருமையினைக் கட்டுரையாக ஆங்கிலச் செய்தித்தாள்களில் எழுதிப் பரப்பினார். தமது கல்லறையில் 'போப்பையர் - ஒரு தமிழ் மாணவர்' என்ற வாசகம் எழுதப்படல் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். இவர் தமிழ் ஆர்வத்திற்கு இவ்விருப்பம் ஒன்றே போதிய சான்றாகு


  1. Dr. Pope himself had truly said that Tamil scho larship was the direct road to poverty. Notwithstandingthis disadvantage, Dr. Pope had devoted ai most sixty years of his life in the study of Tamil Literature and to its critical examination.

    (Siddhanta Deepika Vol. P. 192)

    டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர் ப.11.

    1. Whenever I die. 'A student of Tamil' will be inscribed on my monument- Dr. Pope's letter dated 20th October 1900, to J. M. Nallaswamy Pillai, Editor of the Siddhante Deepika.

    - டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை , கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர் ப. 20