பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

249


பள்ளு - அமைப்பு

வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியில் 'உழத்தி பாட்டு' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள பின்வரும் இலக்கணம் பள்ளின் இலக்கணமாகவே அமைந்திருக்கக் காணலாம்.

"கடவுள் வணக்கம், முறையே மூத்த பள்ளி இளைய பள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், முறையே அவர் வரலாறு, நாட்டு வளன், குயிற்கூவக் கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பரவல், மழைக் குறியோர்தல், ஆற்றின் வரவு, சிறப்புக் காண்டல், இவற்றிற்கிடையிடை அகப் பொருட்டுறையும் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர் முறையீடு, இளையவளை அவன் உரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவன் அது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையிருந்தான் போல வரல், அவனைத் தொழுவில் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளி அடிசிற் கொடு வரல், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்னித்தற் கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் ஆற்றல், அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விதை முதலிய வளம் கூறல், உழவர் உழல், காளை வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்துவித்தல், அதைப் பண்ணைத் தலைவர்க்கு அறிவித்தல், மூத்த பள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் நாற்று நடல், விளைந்த பின் செப்பல் செயல், நெல் அளத்தல், ஏசல் என இவ்வுறுப்புகள் உறப் பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோற்றச் சிந்தும் விருத்தமும் விரவி வர இவற்றாற் பாடுவது."

முக்கூடற்பள்ளு நயம்

முக்கூடல் என்ற ஊரிலே வாழ்கிறான் ஒரு பள்ளன் அவனுக்கு இருவர் மனைவியர். மூத்த மனைவி, முக்கூடற்