பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐரோப்பியர் காலம்

251


'உள்ளத்தில் ஊசலிடும் உல்லாசப் பார்வைவிழிக்
கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ
வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடற்

பள்ளத்தி யாரழகு பார்க்க முடியாதே.'

பள்ளிகளின் ஏசலில் நல்ல சுவையுண்டு. எண்வகைச் சுவைகளையும் பள்ளிற் காணலாம்.

அருணாசலக் கவி

தில்லையாடியிலே பிறந்த இவர், இல்லறம் புகுந்து, பின் துறவறத்திற்கு மாறிச் சீகாழியிலே தங்கினார். அங்கு அசோமுகி நாடகம், இராம நாடகம், சீகாழிக்கோவை. சீகாழிப் புராணம், அனுமார் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இயற்றினார். இவற்றுள் இராம நாடகம், நாடகத் தமிழுக்கு நல்ல வளர்ச்சியினைத் தந்தது.

வடமலையப்பப் பிள்ளையன்

சீரங்கத்திற்கு அருகே நிலக்கிழார் குடியிலே பிறந்த இவர், பதினெண் புராணத்தில் ஒன்றான மச்ச புராணத்தை இயற்றினார். இவர் கலைஞர்களை ஆதரித்தார் என்பதைச் 'செந்தமிழுக்குதவும் தியாக வாரிதி' என்று இவர் வழங்கப்படுதலால் அறியலாம். இவர்,

'நானூற்றுக் கோவையும் நாற்கவி வண்ணமும்
பலர்புகழ் நீடூர்த் தலபுராணமும்'

இருநிலம் புகழு மொருகலம் பகமும்'

இயற்றியமையை உணர்கிறோம். மேலும், 'வடமலை வெண்பா' என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.