பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தமிழ் இலக்கிய வரலாறு


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் எனநான் தேர்ந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என்

சிந்தைமிக விழைந்த தாலோ!'

என்ற பாட்டால் வள்ளலார் கண்ட நெறியினை அறியலாம்.

யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர்கள்

தமிழ்நாடும் இலங்கையும் அரசியல், மொழி, சமுதாயம், பண்பாட்டுத் தொடர்பு கொண்டுள்ளன. தமிழார்வம் கொண்டு தமிழ் வளர்த்த பெரியோர் பலரை இலங்கை ஈன்றெடுத்திருக்கிறது. சமயம், கல்வி, இலக்கியம், இலக்கணம் முதலான பல்வேறு துறைகளிலும் அவர்கள் தொண்டாற்றியுள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர், ஆறுமுக நாவலர்; மற்றொருவர் திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை .

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர், கி. பி. 1823 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்தார். சைவ சமயப் பற்றில் இவர் மனம் ஆழ்ந்திருந்தது. சைவமும் தமிழும் தம்மிரு கண்களெனக் கொண்டார். இரண்டினையும் வளர்க்க யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் கல்லூரிகள் நிறுவினார். கிறித்துவ சமயம் பெரிதும் பரவி வளர்ந்தபோது, பழைய சமயமாம் சைவ சமயத்திற்குப் புத்துயிர் அளித்தார். சென்னையில் ஓர் அச்சுக்கூடத்தினை நிறுவி, இலக்கண நூல்களையும் சைவசமய நூல்களையும் திருத்தமாகப் பதிப்பித்தார். சமயச் சொற்பொழிவாற்றுவதில் தலைசிறந்து விளங்கிய இவர், பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடப் புத்தகங்களும் எழுதினார்; பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இதனால் இவரை அறிஞர் வி. கோ. சூரிய