பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழ் இலக்கிய வரலாறு


இயற்றிய நூல்களே. இவருடைய உரைநடை உயர்ந்து செறிந்து திட்பம் வாய்ந்ததாய்ப் பொருளாழம் அமைந்து காணப்படுகின்றது.

ந. மு. வே. நாட்டார்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பெரும் படிப்பாளர்; அகத்தியர், கபிலர், நக்கீரர் முதலிய புலவர்களைப் பற்றி ஆய்ந்து ஓர் அரிய நூலினை வெளியிட்டுள்ளார். திருவிளையாடற் புராண உரை, சிலப்பதிகார உரை, அகநானூறு உரை, மணிமேகலை உரை முதலியன இவர் இயற்றிய உரை நூல்களாகும்.

கா. சு. பிள்ளை

எம். எல். பிள்ளை என்று வழங்கப்படும் தாகூர் சட்ட நிபுணர் அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளைக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. சைவப்பற்று நிரம்பிய இவர், நாயன்மார் நால்வர் வரலாற்றினை எழுதியுள்ளார். ' இலக்கிய வரலாறு' என்னும் இவரது நூல் என்றென்றும் இவர்தம் பெருமையினைப் பறைசாற்றி நிற்கும்.

எஸ். வையாபுரிப் பிள்ளை

பல ஏட்டுப் பிரதிகளையும் படித்துணர்ந்து. பாடபேதங்களை நோக்கி, நூல்களைப் பதிப்பிப்பதில், அண்மைக்காலத்தில் சிறந்து விளங்கியவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை; தமிழ் பேரகராதிக் குழுவின் தலைவராய் விளங்கியவர் இவர். புறத்திரட்டு முதலிய நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டவை. தமிழ்ச் சுடர்மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம் முதலிய உரைநடை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதியுள்ளார். புலவர்கள் காலத்தை இவர் பின்னுக்கு இழுப்பது அறிஞர் பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழ் மொழி இலக்கிய