பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

263


வரலாறு (A History of Tamil Language and Literature) என்னும் நூல் இவர் இறப்பதற்கு முன்னர் ஆங்கிலத்தில் எழுதியதாகும். 'ராஜி என்ற நெடுங்கதைப் புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.

விபுலானந்தர்

ஈழ நாட்டின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பில் உள்ள காரைத்தீவு என்னும் ஊரில் 29-3-1992-இல் விபுலானந்தர் பிறந்தார். மயில்வாகனன் என்று பெற்றோர் இட்ட பெயர், சென்னை இராமகிருஷ்ண மடத்தாரால் பிரபோத சைதன்யர் ஆக மாற்றப்பட்டுப் பின்னர் விபுலானந்தராய் மாற்றம் கண்டது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய் வீற்றிருந்த இவர், 1947ஆம் ஆண்டு திருக்கொள்ளம்புதூரில் தமது ஒப்பற்ற யாழ்நூலினை வெளியிட்டார். இந்நூலால் தமிழர்தம் இசைச்சிறப்பும் பழைய செய்தியும் புலனாயின. மதங்க சூளாமணி என்னும் நூலையும் இயற்றிய இவர், 1949இல் கொழும்பில் இயற்கை எய்தினார்.

மறைமலையடிகள்

மலைமலையடிகள் முதன்முதல் சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பினார்; சுவாமி வேதாசலம் என்ற பெயர் மறைமலையடிகள் என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார்; வடமொழிக் கலப்பற்ற தூய தனித்தமிழ் இயக்கத்தினைத் தோற்றுவித்தார். மேனாட்டுக்கு உரிய முற்போக்குக் கருத்துகளையும் ஆராய்ச்சி முறைகளையும் தமிழிற் புகுத்தினார். மும்மொழிப் புலவராயும், சிறந்த சொற்பொழிவாளராயும், சைவ சமயப் பெரியாராயும் ஒருசேர விளங்கிய இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பண்டைத் தமிழரும் ஆரியரும், தமிழர் மதம், முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, திருக்குறளாராய்ச்சி, குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி, மாணிக்க .