பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

265


தென்றல், நாயன்மார் வரலாறு முதலான பல நூல்களை எழுதியுள்ளார். 1953ஆம் ஆண்டு மறைந்தார். இவரைப் பி. ஸ்ரீ. அவர்கள், பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன், அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப்போகிறது. அவர் வாழ்ந்துவந்த ‘புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. 'புது விலாசம் மக்கள் உள்ளம்’ என்கிறார்.[1]

ஐரோப்பியர் வருகையால் தமிழில் உரைநடை மறுமலர்ச்சி ஏற்பட்டது. புதிய சில துறைகள் படைக்கப்பட்டன. மேலை நாட்டு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தமிழில் ஒரு மறுமலர்ச்சி எண்ணம் ஏற்பட்டது. இவ்வாறு ஐரோப்பியர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில், உரைநடை வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விளங்கக் காணலாம்.


  1. புலவர் அரசு-திரு. வி. க. வரலாறு, ப. 145.