பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

267


ரஸத்தை உடைத்து உடைத்துப் பின்னப்படுத்திக் காண்பிக்கும் பேர்வழி அல்லர் பாரதியார். அந்தந்த ரஸத்தின் சாயையை அல்லது மூர்ச்சைஸ்தானத்தை மட்டும் பாரதியார் காண்பிக்க மனங்கொள்ளார். அவைகளின் பூரண உருவத்தையும் தன்மையையும் வலிவுடனும் பொலிவுடனும் வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர் பாரதியார்......... அவர் சர்வதேசக் கவி; அதாவது உலக மகாகவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு மறைந்த பண்பட்ட எழுத்தாளர் வ.ரா. அவர்கள் குறுப்பிடுகின்றார்.[1] 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று இக்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்கும் புதிய உயிர் தருவோன் ஆகின்றான் எனப் பாஞ்சாலி சபத முகவுரையில் பாரதியாரே கூறுகின்றார். இக் கொள்கையை ஓர் இடத்தும் கைந்நெகிழவிடாது இவர் பாடலும் வசனமும் இயற்றியிருக்கிறார். இவ் எளிமையோடு நேர்மையும் இவர் தமிழிலே காணப்படுகின்றன.

'நமக்குத் தொழில் கவிதை

நாட்டிற் குழைத்தல்'

என்பது பாரதியார் கொள்கையாகும்.

தமிழ் மொழியின் பழைமையினைப் பாரதியார்,

'தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்த்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்!'

என்று குறிப்பிட்டுள்ளார்.

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு

வாழும் மனிதருக் கொல்லாம்

  1. திரு. வ. ரா., மகாகவி பாரதியார், ப. 111-112.