பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

279


இனி, பாரதிதாசன் தமிழ்ப் பற்றினைக் காண்போம்:

'நன்று தமிழ் வளர்க - தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! - கலை

யாவும் தமிழ்மொழி யால் விளைந் தோங்குக!'

'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்', 'புரட்சிக்கவி' முதலிய பாடல்களும் அறிஞர் போற்றும் சிறப்புடையனவாம். பல திரைப்படங்களில் இவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவருடைய 'வாழ்க வாழ்கவே' என்ற நாட்டுப் பாடல் நாடறிந்த ஒன்றாகும், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று இவர் முழங்குகிறார்.

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

சென்னை அரசாங்க அரசவைக் கவிஞராய் விளங்கியவர் இவர்.

'தமிழ னென்ற பெருமை யோடு
தலைநிமிர்ந்து நில்லடா
தரணி எங்கும் இணை யிலாஉன்

சரிதை கொண்டு செல்லடா'

என்று பெருமித உணர்வோடு பாடுகின்றார். மேலும், இவர்

'தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு'

என்று தம் பாடல்கள் மூலம் உணர்த்தினார். நாட்டு மக்களின் நெஞ்சங்களில் வாழும் வண்ணம் சில பாடல்களை எழுதியுள்ளார். 'தமிழன் இதயம்' 'சங்கொலி', 'அவனும் அவளும்' முதலியன இவர் இயற்றிய நூல்களாகும். விடுதலை வேட்கை கொண்டு கிளர்ந்தெழும் நெஞ்சத்திலிருந்து பிறந்ததே 'தமிழன் இதயமாகும் 'அவனும் அவளும்'