பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

தமிழ் இலக்கிய வரலாறு


ஓர் அழகிய காவியம். இவை தவிர, 'என் கதை' என்று இவருடைய சுய சரித்திரத்தையும், 'இலக்கிய இன்பம்' என்று கம்பராமாயணப் பாடல்கள் சிலவற்றின் நயங்களையும் எழுதியுள்ளார். 'மலைக்கள்ளன்' என்ற அழகிய நவீனம் இவர் சிறையில் இருந்தபொழுது எழுதியதாகும். இவர் எழுதிய நூல்களிற் சிறந்து விளங்குவது 'அவனும் அவளும்' என்னும் காவியமாகும். அந்நூலில்,

'மான் என அவளைச் சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை

மீன்விழி உடையா ளென்றால் மீனிலே கருமை இல்லை; தேன்மொழிக் குவமை சொன்னால் தெவிட்டுதல்

தேனுக்குண்டு;

கூன்பிறை நெற்றி என்றால் குறைமுகம் இருண்டு போகும்'

என்று கதைத் தலைவியின் அழகினைப் புனைகிறார்.

'தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை

தினமும் கேட்பது என் செவிப் பெருமை'

என்று இவர் பிற புலவர்களையும் பாராட்டிப் பேசுகின்றார்.

அண்மையில் மறைந்த இக் கவிஞரைக் காந்தி யுகத்தின் கவிஞர் என வழங்கலாம்.

இன்று தமிழிற் கவிஞர் பலர் பாடல்கள் எழுதிவருகின்றனர்; இசைப் பாடல்கள் இயற்றுகின்றனர்; நாடகத்திற்குப் பாடல்கள் புனைந்து தருகின்றனர்; மக்களிடையே நல்ல வேகத்தினையும் செல்வாக்கினையும் பெற்றுள்ள திரைப்படத்திற்குப் பாடல்கள் இயற்றிவருகின்றனர். இவ்வாறு தமிழ்மொழி பலவற்றானும் இன்று இயல் துறையில் முன்னேறி வருகின்றது.

வாழும் கவிஞர்கள்

பாரதியார், கவிமணி, பாரதிதாசன், ச. து. சு. யோகியார், நாமக்கல் கவிஞர் போன்ற பெருங்கவிஞர்கள் மறைந்துவிட்டனர். அவர்கள் பொன்னுடல் மறையினும் புகழுடல் அவர்தம் கவிதைகளால் மாயாமல் இன்னும்