பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

281


'தமிழச்சி', 'தொடுவானம்', 'எழிலோவியம்' முதலிய நூல் கள் இவர்தம் படைப்புகளாகும். 'சேரி' என்ற கவிதையில்,

'இடுவெயில் போல் உழைக்கும்
சேரிவாழ் ஏழை மக்கள்'
கொடுவெயில் குளிர்ம ழைக்குக்

குந்திடக் குடிசை யுண்டோ ?'

என்று ஏழை மக்களின் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

அன்பின் மாட்சியினை இவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'அன்பு வளர்ந்தால் அலைகடல்சூழ் நம்நாட்டில்
துன்பம் இல்லை! தொழிலாளி செல்வனென்ற

வம்பில்லை! தாழ்வுயர்வுச் சாதி மலிவதில்லை!'

காதலியின் உயர்வினைப் பின்வருமாறு சிறக்கப் புகன்றுள்ளார் கவிஞர்:

'நாள்விளக்க வருகின்ற வைகறையைப் போல

நலம் விளக்க வந்தவளே! விடிகாலை வானே!'

கொள்ளை எழில் குலவும் குழந்தையின் இன்பத்தினைப் பாடிப் பாடிக் களிக்கிறார் கவிஞர்:

'ஓடைப் புதுமலர்த் தாமரை நீ;
ஓவியன் தீட்டாத சித்திரம் நீ!
கோடைக் குளிர் தென்றல்!
கொத்து மலர் முல்லை!

கொஞ்சும் கிளிப்பிள்ளை நீ குழந்தாய்!'

அண்மையில் 'சிரித்த நுணா', 'இரவு வரவில்லை ', 'பாட்டுப் பிறக்குமடா' முதலிய இவர் கவிதைத் தொகுதி