பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

287


எழுத்து வன்மையும் கொண்ட இவர், 'உவமைக் கவிஞர்' என்றும் சிறப்போடு வழங்கப்படுகிறார். வாழும் கவிஞர்களில் புது வழிகாட்டிச் சிறப்பிடம் பெறும் கவிஞர் இவர்.

'தேன் மழை' என்ற கவிதைத் தொகுதியில் இவர் தம் முழுக் கற்பனை வளத்தையும் கண்டு செவியும் சிந்தையும் குளிரலாம். சான்றிற்கு ஒன்று:

'ஓடிக்கொண் டேயிருந்த நதியை நோக்கி
ஓடிக்கொண் டேயிருந்தாள் வாடிக் கொண்டே!
வாடிக்கொண் டேயிருந்தாள்! சூறைக் காற்றின்
வசப்பட்ட கப்பலைப் போல் ஆடிக் கொண்டே!
ஆடிக்கொண் டேயிருந்தாள் அழகி, ஆற்றின்
அடிநீரில் மறைந்தவனைத் தேடிக்கொண்டே!
தேடிக்கொண் டேயிருந்தாள் ஆதிமந்தி

சிந்தாத கண்ணீரைச் சிந்திக்கொண்டே!'

கவிஞர் கண்ணதாசன் நாடு நன்கறிந்த புகழ்க் கவிஞர்: இயற்றமிழ்க் கவிஞர். இயற்றமிழ்க் கவிஞர் என்ற முறையில் பெரிதும் சிறப்பிடம் பெற்ற கவிஞர் இவர். முத்தையா என்பது இவர்தம் இயற்பெயராகும். 1944-ல் ஏப்பிரல் திங்களில் இவர் கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தார். கண்ணதாசன் கவிதைகளில் கற்பனை நயமும், கவிதையாற்றலும் மிளிரும். இவர் கவிதைகள், 'கண்ணதாசன் கவிதைகள்' என்ற பெயரில் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளன. மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி முதலிய சிறு காப்பியங்களை எழுதியுள்ளார். அரிய கருத்து.

'மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மணல்கூடச் சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

என்ற பாடலில் அமைந்துள்ளது.