பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

293


எத்தனை பட்டைகள் வயிரத்தில்
எனினும் சாதிகள் இந்நாட்டில்
எனினும் இந்தியர் இந்தியரே!
எத்தனை ஆறுகள் கடல் வயிற்றில்
எனினும் பெருங் கடலே!
எத்தனை மதங்கள் இந்நாட்டில்
எனினும் இந்தியர் இந்தியரே!
எத்தனை விழுதுகள் ஆலினிலே,
எனினும் ஆலும் ஒரு மரமே!
எத்தனை மொழிகள் இந்நாட்டில்

எனினும் இந்தியர் இந்தியரே.'

தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர் கவிஞர் தணிகை உலகநாதன். வாழ்த்து வரவேற்பு, பாராட்டு, இரங்கல் முதலிய பல துறைகள் குறித்துக் கணக்கற்ற கவிதைகளை எழுதிக் குவிக்கும் இவர், சென்னை மாணவர் மன்றக் கவிஞராய் விளங்குகிறார். இவரது 'குருவிக் குடில்' தமிழ் நாட்டு இளஞ்செல்வங்களை உருவாக்குகின்றது. நாடகம். கதை, கவிதை முதலிய துறைகளில் பல நூல்களை எழுதியிருக்கும் இவரது கவிதை நூல். 'பாடும் பாப்பா' என்பதாகும். இந்நூலில் எண்ண எண்ண இனிக்கும் வண்ணத் தமிழ்க் கவிதைகளை வளமாகக் காணலாம். வானொலி மூலமும் கல்வித் தொண்டாற்றும் இவர், தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்குக் கூறும் ஊக்க உரை அடியில் வருமாறு:

'இன்று சிறுவர் தாமே நம்மால்
என்ன செய்யமுடியும்?
என்று நீங்கள் எண்ணவேண்டா

எதுவும் முடியும் உம்மால்.'

சொல்லாட்சியும் பண்ணலமும் கெழுமிய பாடல்கள் புனைவதில் 'குயிலன்' வல்லவர்.