பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ் இலக்கிய வரலாறு

நிலைத் திருந்ததென்றும், புலவர்கள் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரமென்றும் அந்நூல் கூறுகின்றது.

கடைச் சங்கம்

கடைச் சங்கப் புலவர்கள் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர்கிழார், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலாய நாற்பத்தொன்பது புலவர்கள் என்றும், அவர்களால் பாடப்பெற்றவை நெடுந்தொகை நானூறு ஐங்குறுநூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு. பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் என்றும், அவர்களுக்கு நூலாய் விளங்கியவை அகத்தியமும் தொல்காப்பியமும் என்றும், அச்சங்கம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகள் உத்தர மதுரையில் நிலவியிருந்த தென்றும் இறையனார் களவியலுரை கூறுகின்றது.

ஆனால் களவியலுரை கூறும் இக் கூற்றை முழுவதும் உண்மையென்று கொள்வதற்கில்லை: இற்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழார்வம் மிக்கிருந்த புலவர்களின் உள்ளம், தமிழின் சிறப்பினை இப்படிக் கற்பனையாக எண்ணிப் பார்த்தது என்பர். 'சங்கம் என்ற ஓர் அமைப்பு நிலவியது என்பதே பொய்' என்பர் அறிஞர் சிவராசப்பிள்ளை. ஆனால் புலவர் கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் நிலவியது என்பதற்கு இலக்கியத்தில் பல்வேறு சான்றுகளைக் காணலாம். அவை வருமாறு :

பழைய இலக்கியச் சான்றுகள் :

1.'இமிழ்குரல் முரசம் மூன்றுட னாளுந்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே'
-புறம். 78:13.16

2.'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவ னாக