பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

29

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை

- புறம். 72:13-16

3.

'நிலவினாற் றிரிதரு உ நீண்டமாடக் கூடலார்
புலவினாற் பிறந்தசொற் பதிதுண்ணும் பொழுதன்றோ

- கலி. 85:17-18

4.

'மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீதத செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர

-கலி. 68:2-5

5.

தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்'.

-மதுரைக் காஞ்சி 61-63

6.

'தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர்மதுரை'

- சிலம்பு 10,58

7.

'தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்'

- மணிமேகலை 15, 139

பல்லவர் கால இலக்கியச் சான்றுகள் :

1.

'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்'

- திருநாவுக்கரசர் தேவாரம் 6:76-3

2.

'சங்கத் தமிழ்'

-திருப்பாவை - 30

3.

'சங்க முகத்தமிழ்'

- பெரிய திரு மொழி 3:4-10

4.

'உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்த வொண்

தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்

சூழல்புக்கோ!

- திருக்கோவை-20