பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

தமிழ் இலக்கிய வரலாறு


என ஓலமிடும் நின்னுடுக்கை
சாவுக்கும் அர்த்தமுண்டு
சம்போகத்தின் நாசமுண்டு.

'பெண்ணும் இணைவிழைச்சும்' என்ற தலைப்பில் தர்மு சிவராமு அவர்கள்,

பூவின் இதழ்ச்சுவருள்
வண்டு குரல் ஒலிகள்
மோதிமடிகிறது
முத்தத் திரை மறைவில்
பேச்சுப் புதைகிறது
ஆனால் சுத்தம் கதைக்கிறது
மவுனம் அதிர்கிறது

என்று எழுதுகின்றார்.

கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு

.

இக் கவிதை காமத்தையும் சாவையும் இணைத்துப் பாடுகிறது.

சத்தம் சரணம் கச்சாமி
காமம் சரணம் கச்சாமி
மரணம் மரணம் கச்சாமி

பொருட்பாலுக்குக்
காமத்துப்பாலை விற்கிறேன்
அதற்காக
அறத்துப்பால்
ஏன் அழுது புலம்புகிறது.